என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நக்கீரன் கோபால்"
பொள்ளாச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், நக்கீரன் கோபால் மற்றும் தேனி கண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர். அதில், மார்ச் 30-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை எப்போது சிபிஐக்கு மாற்றப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூறியதுடன், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாக கூறினார்.
இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும், சிபிசிஐடி விசாரணை தொடர்வது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், நக்கீரன் கோபால் நாளைக்குப் பதில் ஏப்ரல் 1-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக அனுமதி அளித்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார். #NakkeeranGopal #PollachiAbuseCase
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து பார் நாகராஜ் நேற்று மாலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜூக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 4 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் முழு பதிலையும் அளித்துள்ளேன்.
என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை சொல்ல முடியாது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் வழங்கினர். பின்னர் வக்கீல் தண்டபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3 மணிக்கு மணிமாறன் வீட்டுக்குச் சென்று சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் வருகிற 25-ந் தேதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து வருகிற 30-ந் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbuseCase #NakkheeranGopal
கோவை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு தொடர்பான வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார்.
அவர் ‘பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலும் 5 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #pollachiissue #cbi
அதில் பாலியல் சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை தொடர்புபடுத்தி பேசி இருந்தார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர்.
எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் போலீஸ் விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அன்று நக்கீரன் கோபாலின் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்தார். நக்கீரன் கோபால் வெளியூரில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று நக்கீரன் கோபால் விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் வருகிற 25-ந்தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நக்கீரன் பத்திரிகையில் வெளியான தகவல்களை மையமாக வைத்தே அவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #PollachiAbuseCase #CBCID #NakkheeranGopal
வேலூர்:
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பான வரவேற்புக் குழு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
பாலியல் தொல்லை பற்றி பெண்கள் தற்போது வெளிப்படையாக புகார் கூறிவருவது வரவேற்கத்தக்கது. பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிகாரம் படைத்த ஆணையத்தை அமைக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த 3-ந் தேதியில் இருந்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணாதது கண்டிக்கத்தக்கது.
பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மணல் குவாரி அமைத்தால் பாலாறு வறண்டு போகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.
எனவே, பாலாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தென்பெண்ணை, பாலாற்றை இணைக்கும் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையை கண்டித்து வரும் 16-ந் தேதி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.
பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 6 மாதங்களாக ஜெயிலில் உள்ளார். நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட பாலியல் புகாரில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியும்.
பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். #mutharasan #nirmaladevi
இந்நிலையில் ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஆளுநரின் துணை செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவதூறு வழக்குதான் பதிவு செய்ய முடியுமே தவிர, 124-வது சட்டப்பிரிவின்கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என நீதிபதி தண்டபாணி கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக நக்கீரன் ஊழியர்களை வரும் 25ம் தேதி வரை கைது செய்யமாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #NakkeeranGopal #RajBhavan #NakkeeranEmployees
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியுடன் தொடர்புபடுத்தி கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது கவர்னர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நக்கீரன் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பிறகு கோர்ட்டு உத்தரவால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து இணை இயக்குனர் மூலம் ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கவர்னர் மாளிகை தொடர்பாக நல்லெண்ணம் கொண்டவர்கள் தெரிவித்த பரபரப்பூட்டும் தகவல் மற்றும் கவலையின் அடிப்படையில் இந்த விளக்க அறிக்கையை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் சிறப்பான கலாச்சாரமும் திருவள்ளூவர் முதல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரை தத்துவ ஞானிகள் மிகுந்த மாநிலம் ஆகும்.
எனவே தமிழக மக்கள் உண்மையின் பக்கம் எப்போதும் நிற்பார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியானது.
சமூக விரோத சக்திகள் சமுதாயத்தை கையில் எடுத்துக்கொள்ளும் அச்சுறுத்தல் ஏற்படும்போது உண்மையை தெரிவிக்க வேண்டிய அவசியம் கவர்னர் மாளிகைக்கு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி துணை பேராசிரியை நிர்மலாதேவியை கவர்னர் மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகளுடன் தொடர்புபடுத்தி கூறப்படுவது முழுக்க முழுக்க பொய்யானது.
போலீசில் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மையை வெளியில் கொண்டு வரும். இந்த நிலையில் மாநிலத்தின் முதல் குடிமகனான கவர்னர் மீது தொடர்ந்து கோழைத்தனமான, அருவெறுக்கத்தக்க, பொறுத்துக் கொள்ள முடியாத அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்தே சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை கண்டு பொதுமக்கள் சிரிக்கிறார்கள்.
எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த விவகாரத்தை பொறுத்தவரை போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
சட்டம் தன் கடமையை செய்து கொண்டு இருக்கும் நிலையில் கடந்த 6 மாதமாக கவர்னரை பற்றி அவதூறு வெளியிடப்பட்டது. என்றாலும் கண்ணியம் கருதி கடந்த 6 மாதமாக கவர்னர் அமைதியாக இருந்தார்.
இந்த நிலையில் நக்கீரன் பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளிவந்த இதழில் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக இடம் பெற்ற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தந்தன. இந்த விவகாரத்தில் போலீசில் நிர்மலாதேவி என்ன வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் என்ற உண்மையான தகவலை கட்டுரை எழுதியவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
உண்மையில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஓராண்டாக கவர்னர் மாளிகைக்கு வந்ததே இல்லை. அவர் கவர்னரையோ அல்லது கவர்னரின் செயலாளரையோ அல்லது கவர்னர் மாளிகை அதிகாரிகளையோ சந்தித்ததே கிடையாது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவுக்கு கவர்னர் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது கூட கவர்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தங்கவில்லை.
கவர்னருடன் சென்றிருந்த அவரது செயலாளரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லவில்லை. ஆனால் இந்த உண்மையை எல்லாம் மறைத்து மிகுந்த வெறுப்பு உணர்வுடன் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
வடிகட்டிய பொய்யான தகவல்களை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை கண்டு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இத்தகைய பத்திரிகைக்கு உண்மையை அறியாத சில மதிப்புமிக்கவர்கள் ஆதரவு கொடுத்தது வேதனையானது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரனார், தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் தங்களது சிந்தனையால், செயலால், பேச்சால், எழுத்தால் நிறைய சேவை செய்து இம்மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கவர்னர் மாளிகைக்கு அபரிமிதமான அதிகாரங்கள் இருந்தாலும் கூட இதுவரை எந்த நடவடிக்கையையும் யார் மீதும் எடுத்தது இல்லை. தொடர்ச்சியான அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுதி காயப்படுத்தியதால் தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் ஆரோக்கியமான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அந்த கருத்துக்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கவர்னரை அச்சுறுத்தும் வகையில் அமைந்தால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள இயலாது.
கவர்னர் மாளிகையின் மாண்பை சீர்குலைப்பவர்கள் முன்பு ஒருபோதும் கவர்னர் மாளிகை அடிபணியாது.
இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #NakkeeranGopal #NirmalaDevi #BanwarilalPurohit
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நக்கீரன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து கவர்னர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களை கைது செய்யலாம் என்று கருதி, நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சம்பந்தப்படுத்தி நக்கீரன் பத்திரிகையில் தகவல் வெளியிட்ட அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீதும், அந்த செய்திக்கு பொறுப்பானவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரின் துணை செயலாளர் செங்கோட்டையன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் செய்திருந்தார்.
இந்த நிலையில் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். நக்கீரன் கோபாலை பார்க்க போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து வைகோ ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் தனக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வைகோவை, நக்கீரன் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் நக்கீரன் கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீசார் என்னை விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறினார்கள். என் மீது வழக்கு இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் வைகோ அங்கு வந்திருப்பதாக என்னிடம் கூறினார்கள். அவர் வந்ததால் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. வழக்கறிஞர் என்ற முறையில் என்னை அவர் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள்.
அவர் வருவார் என்று காத்திருந்தேன். அவர் உள்ளே வரவில்லை. அவர் எங்கே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். அப்போது அவர் சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறினார்கள்.
எனது வக்கீலிடம் வைகோ ஏன் வரவில்லை என்று கேட்டேன். அதற்கு அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் தனி ஆளாக சாலையில் அமர்ந்து தர்ணா செய்வதாக கூறினார். இது பெரிய அளவில் பரவி விட்டது. அவரை கைது செய்துகொண்டு போய் விட்டனர் என்றார்.
அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்து என்னை பார்த்தனர். வைகோ அங்கு எல்லோரையும் மிரட்டி விட்டதாகவும் தர்ணா செய்து பிரச்சினை ஏற்படுத்தி விட்டதாகவும், மு.க.ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார். கவர்னரின் முகத்திரையை கிழிக்க முதலில் புள்ளி வைத்தது வைகோதான்.
பின்னர் என்னை எழும்பூர் கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருமாவளவன், முத்தரசன் வந்தனர். கோர்ட்டில் விவாதம் நல்ல விவாதமாக இருந்தது. கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும் நீதிபதி சொன்ன தீர்ப்பின் மூலம் பெரிய நம்பிக்கை கிடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக எல்லோரும் ஒரே குரலில் நின்றதற்கு முதலில் புள்ளி வைத்தது வைகோதான். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-
நக்கீரன் கோபால் ஜெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டார் என்று நான் கூறினேன். உயிருக்கு துணிந்து அவர் காடுகளுக்கெல்லாம் போய் வந்தவர். 2 வருடம் நான் ஜெயிலில் இருந்தது போல அவர் பொடாவில் இருந்தார். எனவே இதுபற்றி அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் இன்றைக்கு நக்கீரன் கோபாலுக்கு வந்தது நாளை மற்ற பத்திரிகைகளுக்கு தொலைக்காட்சிகளுக்கு வரலாம். தமிழக அரசியலுக்கு வரலாம். எனவே இதை ஒட்டுமொத்த பத்திரிகைகளும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
நீதிபதி கோபிநாத் 124-க்கு முகாந்திரம் இல்லை என்று சொன்னது ராஜ்பவன் கன்னத்தில் விழுந்த அறை என்று சொன்னேன். இந்த கவர்னர் போன்ற மோசமான கவர்னர் இதுவரை தமிழ்நாடு சரித்திரத்தில் வந்தது இல்லை. ஆட்சியை கலைப்பதற்கு கூட அறிக்கை அனுப்பிய கவர்னர்கள் உண்டு. ஆனால் இந்த பதவியை தவறாக பயன்படுத்தி ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டு மந்திரிகளையும், எம்.பி.க்களையும் உள்ளே விடாமல் அலுவலர்களை மட்டும் விட்டு நிர்வாகத்தை பற்றி விசாரணை செய்கிறார். அதற்கு தி.மு.க. எல்லா இடங்களிலும் கருப்பு கொடி காட்டியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் மாதம் நக்கீரன் பத்திரிகையில் கட்டுரை வந்துள்ளதென்றால் அது தவறான செய்தி என்று கோர்ட்டில் முறையிடலாம்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னதும், நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவாக பேசியதும் எங்கே போலீசார் தப்பித் தவறி கைது செய்யப்போய் விடுவார்களோ என்று ராஜ்பவனுக்கு வரவழைத்து விருந்து உபசாரம் நடத்தியது மகா அயோக்கியத்தனம்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் கைமாறி ஊழல் நடந்துள்ளது என்று கூறுகிறார். எந்தெந்த துணைவேந்தர் நியமனத்துக்கு எவ்வளவு கைமாறியுள்ளது என்று நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. மந்திரி என்றால் நீக்க வேண்டியது தானே. கல்வியாளர்கள் கவர்னரிடம் பேசியதாக பொத்தாம் பொதுவாக அவர் கூறுகிறார்.
கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. எங்கள் கோரிக்கை. இந்த கவர்னர் வந்ததில் இருந்து மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கிறார். இங்குள்ள அரசாங்கத்துக்கு முதுகெலும்பும் கிடையாது. சுயமரியாதையும் கிடையாது.
இந்த நாட்டில் நீதியை காப்பாற்றும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதை நேற்றைக்கு நீதிபதி கோபிநாத் நிரூபித்து இருக்கிறார். நக்கீரன் கோபாலை நெருங்கி மூக்கறுபட்ட நிலையில் இனிமேல் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் தமிழக போலீசை ஈடுபடுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #NakkeeranGopal #Vaiko
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தேவை ஏற்பட்டால் கூட்டணி அமைப்போம். அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், அமைச்சர் விஜயபாஸ்கரும் வாக்கிங் சென்றபோது பேசிக்கொண்டது பற்றி எனக்கு தெரியாது. இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து அரசு சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசினார். அரசியல் சார்ந்த விஷயங்களை பேசவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி உடனடியாக தர வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அதனால்தான் முதல்வருடன் நான் செல்லவில்லை. இப்பிரச்சனையில் அரசியல் வேண்டாம்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் அரசுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #NakkeeranGopal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்